இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, March 14, 2017

நிழலின் நிஜங்கள் - மக்கள் மன்றின் முடிவை நோக்கி


ஊடக அரசியலின் உச்சமிந்தக் காலம் என்று சொல்லும் அளவு மிகவும் தீவிரமான ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம் என்றால் அது மிகையாகாது அதற்கு வழியமைப்பது போல் இன்றய அத்தனை இளைஞர் பட்டாளமும் Facebook மூலம் மிகவிரைவான தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் அதுவே மிகப்பெரும் சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதும் சத்தியமே......

இற்றைக்கு பல வருடங்களின் முன்னர் இவ்வாறான நிலை இல்லாதபோது மேடைப்பேச்சுக்களில் மயங்கும் கூட்டங்களாக இருந்தது எம் சமுகம் அந்தக் காலத்து அரசியல் வெறும் முலாம் பூச்சுக்களாக இருந்தது வீரிய வசனங்களாக இருந்தது சமுகம் சார்ந்த அக்கறையான வார்த்தைகளை எமது வேதவாக்கியங்களாக ஏற்று ஒன்று பட்டு நிற்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக பயணித்திருந்தோம் ஆனால் இன்று அத்தனையும் தலைகீழாகிப் போய்க்கொண்டிருக்கிறது யாரையும் யாரும் விமர்சிக்கலாம் என்கின்ற அரசியல் நடந்தேறிக்கொண்டிருக்கிறது
ஒற்றுமை என்றால் என்ன என்று நாம் கேட்குமளவு எமது நிலை மாறிக்கொண்டிருக்கிறது இதன் முடிவு நோக்கிய பயணம் எம் அனைவரின் மீதான தலையாய கடமையாக நான் பார்க்கிறேன்

எம் சமுகத்தின் நிலை குறித்த கவலை இன்றய காலத்தில் மிகவும் மேலோங்கி நிற்கிறது எம் சமுகத்தின் தலைவர்களே மிகப்பெரும் குற்றவாளிகளாக மக்கள் மன்றில் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ஆதாரங்கள் முன்வைக்கப்படுகிறது எடுத்துக்காட்டல்கள் காரண காரியங்கள் நம்பும்படியாக நிருபிக்கப்படுகிறது அத்தனை விடயங்களும் எமது மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது இருந்தும் தலைவன் உத்தமன் என்றுதான் வாதாடிக்கொண்டிருக்கிறோம்

சில வாரங்களாக பேஸ்புக்கில் நிழலின் நிஜங்கள் என்ற தொடரொன்றை https://www.facebook.com/jabeer.raazimuhammadh/posts/10211414263047677 எழுதிக்கொண்டு வந்தார் அவரின் எழுத்தின் ஆரம்பத்தில் நானும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தேன் காரணம் என்தலைவன் மீது மிகவும் கீழ்த்தரமாக குற்றம் சாட்டுகிறார்கள்  அசிங்கப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கோபப்பட்டிருந்தேன் ஒவ்வொருத்தருடைய வார்த்தைப் பிரயோகங்களையும் கண்டு மிகவும் வேதனையடைந்தேன் ஒரு சமுகத்தின் பிரதிநிதியாகிய ஒரு தலைவரைக் குறித்து இவ்வாறெல்லாம் எழுதுகிறார்களே என்று ஆதங்கம் கொண்டேன் அவர்களை கடிந்து கொண்டேன்

அந்த தொடரின் பகுதிகள் கடந்து சென்ற போது எனது மனம் பலவாறு சிந்திக்கலாயிற்று நான் கண்மூடி யாசித்திருந்த என் தலைவன் குறித்த பகுதிகள் என் மனதோடு போர்புரிய ஆரம்பித்து விட்டது இருந்தும் நான் இன்னும் அவரை நேசிக்கிறேன் உண்மைத் தலைவனாகவே கொண்டிருக்கிறேன் எதுவரை தெரியுமா
என் தலைவன் மொழியில் இங்கு விடபட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்கமான பதில் கிடைக்கும் வரை.....

எம் மக்கள் நீதிமன்றில் ஹக்கீம் என்ற முஸ்லிம்களின் தலைவனை குற்றவாளி என்று கண்டவர்களின் ஆதாரங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆனாலும் இது பற்றிய அவரின் நியாயப்படுத்தல்கள் எம் மக்கள் மன்றில் அவர் மூலம் பகிரங்கமாக  முன்வைக்க வேண்டும் அது அறிக்கைகளாகவோ அல்லது மேடைப்பேச்சுகளாகவோ இருக்கலாம் அவ்வாறில்லாது  இதை வெறுமனே விட்டுவிட்டு அமைதி காத்தால் கூட இந்த குற்றச் சாட்டுகளை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று மக்கள் நீதிமன்றம் முடிவு எடுத்துக்கொள்ளும் என்பதையும் எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறேன் உண்மையான தொண்டனாக மக்கள் மன்றில் நானும் ஒரு அங்கமாதலாம் நியாயமான தீர்வு நோக்கி பயணிக்க நானும் ஆசைப்படுகிறேன்

இத்தனை காலமும் ஏதோ ஒரு வகையில் அரசியல் அதிகாரங்கள் இரந்தும் முன்னேற்றமற்ற அனாதைகளாகவே எமது வாழ்நாள் கழிந்து விட்டது கடந்து வந்த எம் பாதையை திரும்பிப் பார்க்கின்ற போது மிகவும் வேதனையுடன் ஆசுவாசப்படுகிறோம் கடந்த காலமும் நிகள்காலமும் எதிர்காலமும் ஒரு வாறு அமையுமாக இருந்தால் எம் எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பொரும் துரோகிகளாக நாம் இருப்போம் என்பது யாராலும் மறுக்க முடியாது  உண்மையில்  கடந்த முப்பது வருட மூத்த அரசியல் வாதிகள் இட்ட தவறுகளால் இன்று நாம் எமது முகவரிக்காக அல்லல்படுகிறோம்
இந்த நிலை எம் இன்றய இளைஞர்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது.

ஒன்று பட்ட ஒரு சமுகத்தில் ஒற்றுமையால் அத்தனையும் சாத்தியமாகும் எதிர்கால சந்ததிக்காகவேனும் அனைவரும் ஒன்றுபட்டு சாத்தியமான அரசியல் ஒன்றை இனங்காண வேண்டும் சமரசங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் தவறிழைக்காத மனிதனில்லை குற்றம் செய்யாத மானிடமில்லை திருத்தல்களும் திருந்துதல்களும் இறைவன் மீதான பயமும் நாளைய மறுமையின் விசாரணைக்கான பதில்களுக்குமாக எம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும் அற்பம் இந்த வாழ்நாளில் மரணம் எப்போது வரும் என்று யாரும் அறிந்தவரில்லை அதற்கு முன்னரான கடமைகளை சரிவர நிறைவேற்றுங்கள் நாங்களும் உங்களோடு துணைவருகிறோம் ----

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...