இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, August 31, 2015

ஏமாற்றமே துணைவருகிறது......


கயிரறுந்த காற்றாடியாய் 
துடுப்பிழந்த படகாய் 
இன்னல்களோடென் வழியில் 
அந்தரத்து வாழ்வெனக்கு.....

பெற்றமனம் கல்லாகி....
கரம் பற்றியவன் தொல்லையாகி 
நன்றியற்ற மானிடங்களால் 
நலமின்றித் தவிக்கிறேன்.....

நானீன்ற ஜீவன் 
நலமோடு தானிருக்க....
சுகங்களேதும் தேடாது....
சுத்தமாகவே தொடர்ந்தேன்....

விதி  செய்தது சதியெனக்கு..
காதலொன்று கனிந்து...
சாதலொன்றை அதனுள்ளாக்கி 
வாழ்வொன்று மலருமென்றிருந்தேன் 
மகிழ்ந்திடவும் வகை செய்யலியே.....

எட்டப்பர் கூட்டத்தின் 
எள்ளி நகையாடல் கண்டு 
ஏழை என் வாழ்வுக்கு 
ஏமாற்றமே துணைவந்தது.....

ஏமாற்றுச் சூழலில் 
அடுக்கடுக்காய் வஞ்சிக்கப்டுகிறேன் 
தஞ்சம் என்று நாட 
நஞ்சு கூடத் துணைவரவில்லை 

நன்றி மறந்தோரின் நானிலமிது 
ஏமாற்றுவோரின் சங்கமமிங்கு
ஏப்பம் விடுகிறார்கள் ஒன்று கூடி
ஏழ்மையாய் மட்டும் பிறந்திடாதே.....

Tuesday, August 25, 2015

நானடைந்த நட்பு......


தொலைந்த உறவொன்றை  
தொடராமலே அடைந்துவிட்டேன் 
அன்றொருநாள் பாசங்கொண்டு 
நேசித்திருந்த அன்பானதொரு உறவு 

என்னை எனக்கே அறிமுகம்செய்து 
என்னுள்ளிருந்த கவிஞனைக் கண்டெடுத்து 
உலகவலம் கவிதைகளாலாக்கி 
உவமையற்ற உறவாகியிருந்தாய் 

உன்னோடு உறவாடாதிருந்த நாட்களில் 
என்னைத் தொலைத்ததாய் எண்ணியிருந்தேன் 
எங்கோ நீ மகிழ்வாயிருக்கிறாயென்று 
இங்கே நான் மகிழ்ந்தேயிருந்தேன் 

உன்னோடு பேசவேண்டு மென்று 
குறுந்தகவல் மாத்திரங்கண்டு 
குதூகலத்தின் உச்சியில் 
பட்சிகளாய் விண்ணில் மிதந்தேன் 

அத்தனையும் உன்னாலென்று சொன்னபோதும் 
எதனையும் உன்னிடமிருந்து பெறாதபோதும் 
சொந்தம் என்று மட்டும் உள்மனதில் சொல்கிறது 
சொர்க்கம் கண்பதாய் உணர்கிறது 

ஒப்பீட்டளவு உறவில்லை நீ 
ஒப்பானதொரு காதலுமில்லை நீ 
தப்பானதொரு வழியுமில்லை நீ 
ஒப்பிடமுடியாத  நட்பொன்று நீ 
நட்பின் இலக்கணம் நீதானென்று 
நட்புகளொடு மட்டுமே சொல்லமுடிகிறது. 

Saturday, August 22, 2015

உன் வயதுனக்கு வளம்....


உன் சொற்ப வாழ்நாளில் 
வயதுனக்கு வாலிபம் தந்திருக்கிறது 
செழிப்பு மிக்க வாலிபத்தினை 
சோம்பலால் வறண்டிடச் செய்கிறாய் 

பரந்து பட்ட உலகம் உன்முன்னே
பலவழிகள் திறந்து நிற்கிறது 
அற்பம் உன் சிற்றாசைகளால் 
அழித்துக்கொண்டிருக்கிறாய் வாலிபத்தினை...

தப்பில்லாக் காதல் கொண்டு 
தப்பாகிய காமத்தினால் அழிகிறாய் 
சுகமில்லாக் குடியைக் கொண்டு 
சுமையாய் குடியில் தொங்குகிறாய்....

விஞ்ஞான உலகம் தந்த வழிகளில் 
மெய்ஞ்ஞானம் தேடல்மறந்து 
பொய்மை உலகொன்றில் 
செய்வதறியாது தடுமாறுகிறாய்......

மரக்கிளை இன்று நீ 
நாளை மரமாகின்ற போதுதான் 
கிளைாயிருந்து கிழித்தவைகள் 
கீறல்களாய்த்  தொடருமுன் வழியில்...

உனக்காக சுழலுகின்ற கடிகாரம் நிற்பதற்குள் 
உன்நிலை நீ உணரந்து 
நானிலம் போற்றும் செல்வமாய் 
இன்நாட்களை உமக்காய் அமைத்துக்கொள்....

Wednesday, August 19, 2015

வென்றிருக்கிறோமா தோற்றிருக்கிறோமா

இஸ்லாமியச் சகோதரர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் 

வென்றிருக்கிறோம் என்று மார்தட்டி மகிழ்வதா? தோற்றிருக்கிறோம் என்று அழுவதா என்று குமுறுகின்ற மனதுடன் சில விடையங்களை சுட்டிக்காட்டிட விளைகிறேன். பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் வழிகாட்டலில் வியுகங்கள் வகுத்து வெற்றி நோக்கி பயணிக்கின்ற நாம் அவர் காட்டி நின்ற ஒற்றுமை என்னும் கையிற்றை விட்டும் செல்கிறோம் என்பதுதான் இன்றைய வேதனையான விடையமாகியிருக்கிறது. 

அஷ்ரஃப் அவர்கள் கண்ட கனவை இன்று திகாமடுள்ள மாவட்டத்தில் நிஜமாக்கியிருக்கிறோம் அதே வேளை பல இடங்களில் தோற்றமைக்கான காரணம் என்ன என்பதை அவதானிக்க வேண்டிய கடமைப்பாடு அத்தனை போராளிகளுக்கும் இருக்கிறது 

ஒரு காலத்தில் பல கட்சிகளாக பிரிந்து நின்று இரண்டு அல்லது முன்று ஆசனங்களை மாத்திரம் பெற்றுவந்த தமிழ்சமுகம் கடந்த  10-15 வருடங்களாக ஒற்றுமையை நிலை நாட்டி வேற்றுமையகற்றி வென்று நிருபித்து வருகிறார்கள் அவர்களின் ஒற்றுமையின் வாயிலாக இந்த தேர்தலிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். வாழ்த்துகிறோம் அவர்களை 

அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின்னர் சின்னா பின்னமாக்கப்பட்ட முஸ்லிம் சமுகமாகிய நாம் வென்றும் தோற்றவர்களாகத்தான் வெந்து கொண்டிருக்கிறோம். ஒரே குர்ஆன் ஹதீஸ் என்னும் ஓரிறைக் கொள்கையின் வாயிலாக வாழுகின்ற எம் மத்தியில் ஒரு தலைமைக்குக் கீழ் ஒன்றுபட முடியாமல் அனைவரும் தலைவர்களாக அனைவரும் ஆட்சியாளர்களாக மாறுவதற்கு ஒரே சமுகத்தில் முண்டியடித்துக்கொண்டு அற்ப அரசியலுக்காக உயிரைக்கூட மாய்க்கின்ற கேவலமான அரசியலை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம் வெட்கமாக இருக்கிறது. 

பல கட்சிகளில் பிரிந்து நின்று நான்கும் ஐந்துமாக நீங்களெடுத்து மாற்றுச் சமுகத்தின் வெற்றிக்கு வழிவகுத்து நிற்பதை விட ஒன்று பட்டு மொத்தமாக வென்றிருக்கலாமே என்பதுதான் எங்களது ஆதங்கமாக இருக்கிறது. 

ஒவ்வொரு தோல்வியிலும் படிப்பினை இருக்கிறது வெற்றியிலும் ஆழுமை இருக்கிறது அவற்றை ஆய்ந்து வளப்படுத்துவதன் ஊடாகத்தான் எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம். 

முஸ்லிம் சமுகத்தவராகிய நாம் ஆங்காங்கு வென்றிருந்தாலும் மொத்தமாக தமிழ் சமுகத்தோடு ஒப்பிடுகின்றபோது தோற்றுத்தான் இருக்கிறோம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை 

இலங்கை நாட்டினுள் முஸ்லிம்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் ஒரே சமுகத்தவர்தான் அவ்வாறே அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமைப்பட்ட ஒரு சமுகமாக மாறும் காலம் இனிமேலாவது வருமா?? இது பற்றி இன்றிறிருக்கின்ற அத்தனை தலைவர்களும் சிந்திப்பார்களா?? எதிர்காலத்தில் சுயநலங்களை தள்ளிவைத்துவிட்டு சமுகத்திற்காகவும் இறைவனுக்காகவும் ஒற்றுமைப்படுவார்களா?? என்பதுவே அனைத்து உணர்கவாளர்களும் கேட்டுக்கொண்டிருக்கின்ற இன்றய கேள்விகள் 

ஒன்றை மட்டும் தெளிவா புரிந்து கொள்ளுங்கள் தலைமைகளும் சமுகப்பொறுப்புகளும் இறைவனால் அமானிதமாக வழங்கப்பட்டிருக்கிறது நாளை இறைவனின் கேள்வி கணக்குகள் காத்திருக்கிறது அவனின் பிடி பயங்கரமாக இருக்கும் அனைத்தையும் உதறித்தள்ளி இனிமேலாவது வெற்றியிலும் தோல்வியிலும் ஒன்றுபடுவோமா????? 

வென்றது ஜனநாயகம்....2015

ஜனநாயகத்திற்கான தேர்தல் 
ஈற்றில் வென்று நிமிர்ந்திருக்கிறது 
நாடும் மக்களும் மகிழும் 
நல்லாட்சிக்கான தேர்தல் 

இனத்துவேசம் மதத்துவேசம் 
ஊர்பேதம் பிரதேசவாதம் 
அத்தனையும் தோற்கடிக்கப்பட்ட 
வரலாற்றுத் தடமான தேர்தல் 

நாளைய சந்ததயினர் 
தலைநிமிர்ந்து வாழ்ந்திட 
இன்றைய சமுகத்தின் 
கற்சிலையாகிய தேர்தல் 

அரக்க குணங்களைக் காடேற்றி 
அறிவிலிகளை ஆய்ந்தகற்றி 
நல்லாட்சிக்கு வித்தாயமைந்த 
தேர்தலிது வாழ்த்துகிறேன் 

Thursday, August 6, 2015

கல்யாணச் சந்தையில்.......


கல்யாணச் சந்தையில் 
செக்கு மாடுகளாய் மாப்பிள்ளைகள் 
ஹறாம் ஹலால் தெரிந்திருந்தும் 
ஹாறாத்திலான திருமணங்கள் 

மார்க்கம் கற்றிருந்தும் 
பணம் வசதி கையிலிருந்தும் 
சீதன மூட்டைகளை - எம் 
மாப்பிள்ளைக் கழுதைகள் சுமக்கிறார்கள் 

என் சமுகத்து வாலிபனே....
இறைவன் படைத்த அழகிய உருவம் நீ 
அவனே படைத்த பரந்த உலகில் 
உனக்கென வீடமைத்து 
பெண்ணுக்கு விலை கொடுத்து 
வீரியப் புருசனாய் வாழவேண்டாமா நீ.....

பல லட்சம் கையில் வாங்கி 
சில ஆயிரம் பிச்சையிட்டு 
அடிமைச் சாசனம் ஊர் கூட்டியெழுதி 
அடகு வைக்கிறாயே உன் ஆண்மையை 
ஆணாய்ப் பிறந்ததால் அவமானமில்லையா உனக்கு...

இறைவன் வகுத்தளித்த பாதை மறந்து 
உலக ஆசையில் உன்னை மறந்து வாழ்கிறாய் 
திருமணம் பேசுமுன் சீதனத்தை தேடுகிறாய் 
அத்தனையும் அற்பமென்றுணரந்து 
அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்....

Wednesday, August 5, 2015

எம் முகவரி எம் கையில்


வாக்கு எனும் பலம் கொண்ட யானை நீ 
சாக்குப்  போக்குகள் எனும் சங்கிலி கொண்டு 
வருகிறார்கள் மயிலிலும் வெத்திலையிலும் 
மரம் உன் தீனியானதால் பலசாலிதான் நீயென்றும் 

பத்துப்பேர் வெத்திலையில் நின்றார்களன்று - அந்தப் 
பத்துப்பேரும் தொங்குகிறார்கள் மயிலின் காலிலின்று 
செத்துப்போன பாம்புகளாய் அதன் தலைமைகள் 
சத்தமின்றி சங்கறுந்து நிற்கிறார்கள் 

மேடைக்கு மேடை கூச்சமின்றி ரா பிச்சை கேட்கிறார்கள் 
மரமென்ற செல்வந்தனிடம் மண்டியிட்டு நிற்கிறார்கள் 
மகிழும் எம் தலைவன் மனமுவந்து மன்னிக்கிறார் 
ஆனாலும் பாடமொன்று கற்பிக்க காலமொன்று வரும் 

சதாவின் சூட்சிகள் முறியடிக்கப்பட்டு 
அதாவை வீட்டுக்கு காவல் வைக்கப்படும் 
ஹொறாவின் கொட்டம் அடங்குகின்ற நொடியில் 
சின்னாபின்னமாகிடுவார்கள் சில்லறைகள் 

முழுமதி எம் தலைவனே முத்தான மூன்றை முன்னுரைத்து 
முழு இலங்கைக்கும் முடிசூடா மன்னனாய் 
எம் சமுகத்தின் காவலனாய் வலம் வருகிறாய் 
முத்துக்கள் மூன்றையும் வித்துகளாய் 
விதைப்பதை எம் கையில்லவா ஒப்படைத்திருக்கிறாய் 

எம் மரத்தின் சத்தான போராளிகள் - யானைக்கு 
மொத்தமாக வாக்களித்திடக் காத்திருக்கிறோம் 
நிச்சயிக்கப்பட வெற்றியுடன் ஒன்று  சேர்ந்திட 
தொக்கி நிற்பவர்களையும் கைகோர்த்திட அழைத்து நிற்கிறோம் 

அன்பார்ந்த போராளிகளே வாக்காளர்களே 
சுயநலக்காரர்களின் விமர்சனங்கள் பல்லாயிரம் 
அயலவர்களின் ஒற்றுமையிலேனும் நாம் கற்று 
எமக்கான முகவரியை நாமே எழுதிக்கொள்ள வேண்டிய 
காலகட்டத்தில் உள்ளதை மறந்திடாதீர்கள் 

நாளைய தேசத்து எம் சந்ததியினருக்காக
இன்றய எம் வாக்கு முக்கியமானது 
அற்ப சுகத்திற்காய் அடகு வைத்து 
சமூகத்தின் நாசக்காரர்களாய் மாறிடாதீர்கள் 
ஒன்று படுங்கள் உலகையாளலாம்.  

இடைவெளிக்கு முற்றுப்புள்ளி.....

காலமொன்று கடந்தே விட்டது 
கவித்துவமும் கண்ணீர்த் துளிகளுமாய் 
காலா காலம் கருத்தாளந் தந்து 
கற்பனைக்கு வடிவம் கொடுத்த 
காலமொனறு கடந்தே போய்விட்டது 

உள்ளுக்குள் எத்தனை உணர்வுகள் 
உயிர்பெறத்துடிக்கிறது உடலெங்கே 
உருவமெங்கே எனத்தேடி ஒவ்வொரு நொடியும் 
வெருண்டோடுகிறது வெற்றுத் தடங்களோடு மாத்திரம் 

எழுது என்று உணர்வுகள் கூறியதற்கு 
முனைந்தே முகவரி தந்திட 
மீண்டும் என் பக்கங்களை புரட்டிப்பார்க்கிறேன் 
நட்புகளோடும் வாசகர்களோடும் 
உறவுகலந்திட இன்றே புறப்படுகிறேன் 

இஃது நாள் வரை என்னோடு தொடர்ந்த 
அத்தனை தோழமைக்கும் என் உளங்கனிந்த 
மகிழ்வையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் 
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 




Related Posts Plugin for WordPress, Blogger...