இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, December 17, 2012

தப்பாகியது காதலா.......???


முறுக்கேறிய இளமைக்கு 
முதுமையின் அறிவுரை புரிவதில்லை 
விடலையவன்(ள்) வீழ்ந்துவிட்டான்(ள்) 
காதலெனும் சமுத்திரத்தில் 

துடுப்புள்ள உறவுகளுக்கு 
துணைகொடுக்கத் தெரிவதில்லை 
தீயது காதலென்று தீய வார்தைகளால் 
எரித்திடுவார்கள் எரிந்து......


நீ காதலிக்கிறாயா? துணை கண்டாயா? 
என்ற கூக்குரலில் தலைகுனியச் செய்து
தளும்புகளால் கோலமிட்டு 
வம்புகளால் வெறுக்கச்செய்து 
தேடிய துணை நாடி 
திரும்பிடச் செய்தல் முறையோ 

கிடைக்காத ஆதரவுகளால் 
கிடைத்த காதலை ஏற்றதில் 
துரோகிகளாய் மாற்றப்படும் 
தளிர்களோ ஏராளம்.....ஏராளம் 

Wednesday, December 12, 2012

நீயும்...அனாதையாவாய்.


மங்கிப்போன மனிதநேயங்களின் 
அறுவடையில் விழைநத மாணிக்கங்கள் 
புழுதி படிந்து கிடக்கிறது 
பொழுது விடிந்தும் விடியாத வாழ்வுடன் 
வீதியில் இன்னும் உறங்கிக் கிடக்கிறது 

தாயின்றிய தளிர்கள் 
தரைகொடுத்த மடியில் 
தன்னை மறந்து துயில
பெற்றவரம் பசியின் கொடுமையோ 
கருணையின்றிய மானிடமோ

பஞ்சணை தரமறுத்த உலகில் 
நெஞ்சணை கிடைத்ததே என்றும் 
ஆரத்தழுவ மறந்த உலகில் 
அதரவளித்தேன் என்றும் 
பரிமாறிக்கொண்ட பாசங்களிங்கு 

கிழிசல்களும் கீறல்களும் நிறைந்து 
கற்களிலும் முட்களிலும் படர்ந்து 
கழிக்கின்ற வாழ்வுக்கு நிகர்தேடும்
நிர்க்கதியான ஜென்மங்களுக்கு 
நிளல்களிலேனும் இடந்தாருங்கள் 

Sunday, December 9, 2012

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......


பெண்ணாய்ப் பிறந்தேன் - நல்ல
பிள்ளையாய் வளர்க்கப்பட்டேன்
குலத்தின் விளக்காய்
குடும்பத்தோடு கலந்து மகிழ்ந்தேன்

வயதெனக்கு வந்ததென்று
வரண்கள் பல தேடுகிறார்கள்
வருகின்ற மாப்பிள்ளைகளெல்லாம்
(சீதனம்) மலையளவு கேட்கிறார்களாம்

ஒரு சாண் என்வயிற்றுக்கு
சோறுபோடத்தகுதியற்ற
நொண்டியெனக்குத்தேவையில்லை
மகருக்காய் ஒரு சொல்லேனும்
கற்றுத்தரும் மாந்தரொன்றை தேடுகிறேன்

என்னிடம் பணம்பெற்று
எனக்கவன் உடுத்தத்தேவையில்லை
சீதனம் பத்துலட்சம் வாங்கிவிட்டு
மகரெனக்கு நூத்திஒன்றும் தேவையில்லை
ஹறாமாய் ஆரம்பிக்கும்
இத்திருமணமும் தேவையில்லை

Saturday, December 8, 2012

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பாகம் - 14)



திருமணவாழ்வுடன் தொடர்ந்து
இருமன மகிழ்வுடன் கலந்து
பல மனங்களின் சங்கமத்தில்
அங்கங்கள் கொள்ளும் சங்கமமே
வாழ்வின் வெற்றி என்று என்மனம்
சில தினங்களில் ஏங்கியதை மறக்கவில்லை

வாலிபத்தின் முதிர்வும்
தனிமைகளின் வெறுப்பும்
ஈர்ப்புகளை ஏந்திக்கொள்ள
வழிசெய்து வகைசெய்ததை
வார்த்தைகளில் மாத்திரம்
மறுத்திருந்ததை மறக்கவில்லை

என்நிலை உணர்நது என் கரம் பற்றிட
வந்தவர்களுள் மேன்மையானவரென
போராடிய என் மனதிற்கு ஆறுதலாய்
தொடர்ந்தவனின் தொடர்புகள்
அவனைத் திரும்பிடச்செய்ததை
காதலென்று உணர்ந்ததை மறக்கவில்லை

மறுவாழ்வும் கிடைக்கிறது - என்
திருமகளுக்கும் தந்தைவாழ்வு
உறுதியாகிறதென்ற மங்கல நிகழ்வுகள்
மகிழும் தினங்களாக எங்களின்
வாழ்க்கைக்கு வழிசெய்ததை
ஏற்றிருந்ததை மனம் மறக்கவில்லை

Wednesday, December 5, 2012

பாசத்தின் போர்வலம்......


ஆனந்தமாய் அன்னையோடிருந்தேன் 
கலைத்தெங்களைப் பிரி்த்தவரெவரோ..?
இரு மனங்களுக்கும் கடிவாளமிட்டுக்
கைது செய்து அடைத்தவரெவரோ ??
வெறுக்கப்பட்ட எதிரிகளாய்ப் பாசத்திற்காய்
எங்களுக்குள் போர்வலம் நடக்கிறது

அம்மா வழி காணத்துடிக்கிறேன்
அவளின் மொழிச்சலைக் கேட்கத்துடிக்கிறேன்
அவள் மார்பில் அன்றும் உதைத்திருப்பேனே..
தூக்கி எறிந்து விட்டு தூர இருந்திருப்பாளா??
இன்று செய்த தவறென்னவென்று
உணர்த்தப்படாத குற்றவாளியாய்த்- தாயின்
தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறேன்

உலகத்துத் தாய்களெல்லாம்
பெற்ற குழந்தைகளைப் பேறுகளாய்க் கொண்டு
நாற்செல்வமும் நாளும் தேடி
மனமகிழ்வை நலங்களாய்க் கொடுத்து
தன் மனம் மகிழ்ந்திருப்பார்களாம்

Thursday, November 29, 2012

(ஹிஜாப்) பர்தாவின் உரை கேளுங்கள்.......


மகளீர் மாணிக்கங்களை
காத்திடப்பிறந்தவள் நான்
மாதர் குலத்துக் கற்புகளுக்குப்
பாதுகாவலும் நான்

என் கண்மணிகளின் தேகத்தை
மேயவரும் கண்களுக்கு எதிரியானவள்
பார்வைச் சிறைபிடிக்கப்படும் மாதுகளின்
தேகத்தை விடுவிப்பவளும் நான்

எங்கே திறந்து கிடக்கிறதென்று
ஊர்ந்து வரும் கண்களுக்கு
என்னைக் கண்டமாத்திரத்தில்
ஆத்திரம் கொண்டதைக் கண்டிருக்கிறேன்

அழகு சாதனங்களுக்கென கிரயங்களும்
விரயமற்ற நேரங்களுமென
என்னால் என் அரசிகளுக்கு
எப்பொழுதும் வீண் விரயங்களில்லை

கண்களால் கற்பழிக்கப்டாத
உடல் நெளிவுகளின் அழகினை
உரியவனிடமே முழுதாய் ஒப்படைத்திட
முழுக் காரணி நானாகிறேன்

Monday, November 26, 2012

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பாகம் - 13)

     அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பாகம் - 14)
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 12)


அனாதையுடன் அனாதையொன்று சேர
ஆரத்தழுவி அணைத்தபடி அங்குமிங்கும்
அரவம் தேடினேன் யாருமில்லை
யாரது சேயோ எனக்களித்தவர் யாரோ
விடைகளற்ற கேள்விகளோடு
வீதியில் இறங்கி நடந்ததை மறக்கவில்லை

என்னைப்போல் நீயுமா வென
நோக்கினேன் மழலையை
அவளது புன்சிரிப்பில் புதையுண்டேன்
புலரும் பொழுதுகளெல்லாம்
அனாதைகளைச் சுமக்கிறதே
காலத்தின் கொடுமையிதுவா வென
வெறுத்ததென்மனம அதை மறக்கவில்லை

முடித்திட நினைத்த வாழ்வுக்கு
முகவரி தந்த குழந்தையை முத்தமிட்டு
முழுத்தாயாய் நான் மாறி
அவளையும் பார்போற்றச் செய்து
அனாதைகளற்ற உலகம் நாட
உணர்ந்தேனதை மறக்கவில்லை

Sunday, November 25, 2012

உலகம் அழியும் நாள் அரிகிலுண்டு.....


அக்கிரக்காரர்களின் அராஜகத்தைக்
காணச் சகிப்பதில்லை மனம்
விக்கித்த எம் இதயங்களிலிருந்து
கண்ணீரும் வர மறுக்கிறது

உயிர்கள் மதிப்பற்றதாகி
வீதிகளெங்கும் சிதறடிக்கப்படுகிறது
அப்பாவிக் குழந்தைகளைக் கொன்று
இரத்தம் குடிக்கிறான் இஸரேலியச் சாத்தான்

வளர்த்துவிட்ட அமெரிக்காவும்
வேடிக்கை பார்க்கும் அரபுலகமும்
வேதனைப்படுவதாய் தெரியவில்லை
இறைவனின் துணைநாடி
ஏழைகளங்கு இருகரமேந்துகின்றனர்

வாடகைக்காய் வதிவிடம் நாடியவன்
உடமைகள் என்னுடையதென்று
உரிமையாளனை வீதியில் நிறுத்திவிட்டு
நிரந்தரக் குடிபுகுந்த துரோகிகளின் ஆட்சி

Saturday, November 24, 2012

மனங்களின் ஏக்கம்....


கிடைத்ததோடு வாழ்ந்து
பிறருக்கும் நற்கொடையளித்து
மகிழ்ந்தானன்று மனிதன்
இல்லாதவற்றுக்குக்கெல்லாம்
ஆசைகொண்டு இல்லாதவனிடமே
கொள்ளையடிக்கிறானின்று

பணந்தான் வாழ்வென்று
பணத்துக்காக எதையும்
இழக்கத்துணிந்து இழிவுறும்
இயல்புகொண்ட மானிடர்கள்

ஆட்சிசெய்யும் பேராசையுடன்
யார் எக்கேடு கெட்டாலும்
என்னலம் என்னோக்கமென்று
கொன்று குவிக்கும் அசுரர்கள்

வாழ்வளிக்கப்படாத அனாதைகள்
வாழ்விழந்த விதவைகளென
அடிப்படைத் தேவைகளுக்காய் - இன்று
கண்ணீர்வடிக்கிறது உயிர்கள்


Thursday, November 22, 2012

காதலோடும்... கவிதையோடும்


சுகமானது காதெலென்றும்
ரணமானது ஏக்கங்களென்றும்
வலுவானது உறவுகளென்றும்
உள்ளக்கிடக்கைகளான உணர்வுகளுக்கு
உருவம் கொடுக்கிறதென் கவிதைகள்

தினமும் மொழிந்திட நினைக்கும் (கவிதை)
பேச்சை நிறுத்து என்றதினால்
பேசத்துடிக்கும் வார்த்தைகளின்
போராட்டங்களால் என்னுள்ளம்
போர்க்களமாகித் தவிக்கறதெடி


உன் மூச்சை நிறுத்து என்று
சொல்லியிருக்கலாம் என்னிடம்
உனக்காக உடனே என்சுவாசம்
நின்றிருக்கும் நின்றஇடத்தில்

Wednesday, November 21, 2012

உணர மறந்த சர்மிளாவால் உணர்த்தியவைகள் தவறு....


சர்மிளா செய்யத் என்ற எழுத்தாளரின் கருத்தில் தத்தளித்திருக்கின்ற எம் சமுகத்தவர்களின் மனங்களுக்கு ஆறுதலை இறைவன் அளித்திடட்டும் உண்மையில் சர்மிளா செய்யத்தின் எழுத்து பற்றியும் அவரது சில சமுக அக்கறை பற்றியும் மிகவும் மகிழ்ந்திருந்த வேளை (BBC ல் சர்மிளாவின் செவ்வி) இப்படியான ஒரு செய்தி அவர் மூலமாக வெளியிடப்பட்டிருப்பதுதான் வருத்தத்தினை அளிக்கிறது இதற்கு சார்பாகவும் சிலர் (உதாரணத்திற்கு) கருத்தெழுதியும் வருகிறார்கள். இவர்களுடைய பார்வையில் முஸ்லிம் சமுகத்தவர்களின் கருத்தில் பிழை இருப்பதாக காண்கிறார்கள் இதனை பலர் தெழிவு படுத்தியும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை 

உண்மையில் இந்த கோபத்திற்கான எதார்தமான காரணம் என்ன என்று ஆராயும் போது ஒரு பௌத்த மதத்தைச் சார்ந்த ஒரு அமைச்சரின்(“விபச்சார்த்தை சட்டரீதியாக்க வேண்டும் அதன் மூலமாக சுற்றுலாத்துறையின அபிவிருத்தி செய்யலாம்”) என்ற இந்த  கருத்தை சொன்ன போதே இலங்கையின் நிலை எந்த அளவுக்கு செல்கிறது என்று சிந்திக்கின்ற பாமரன் கூட “காசுக்காக கூட்டிக் குடுக்கத்துணிகிறானே” என்று வாய்விட்டுச் சொல்லும் நிலைக்கு இட்டுச்சென்ற கருத்தினை ஆதரித்து இஸ்லாமிய மார்கம் தெரிந்த அதில் வாழ்கின்ற ஒரு பெண்மணியால் இதனை ஆதரித்து பேசமுடிகிறது என்றால் அவரது நிலை என்ன என்ற கேளவிதான் அனைவரையும் நிலை குலையச்செய்தது என்பது நிதர்சனமான உண்மை 

Sunday, November 11, 2012

மதம் திறந்தொரு காதலா...???

வாழ்க்கைக்காய் காதலித்து 
காதலுக்காய் யாவும் துறந்து 
கால் பதிக்கின்ற காதலர்களே 
உம் கால்கள் தடுமாறுவதேன்

அத்தனையும் மறந்ததொன்றும் 
அதிசயமில்லை காதலுக்கு 
படைத்த இறைவனையும் மறக்கின்ற 
உம் அற்பக் காமத்தையா 
காதலென்கின்றீர்கள் .....

தாய் தந்தை துச்சமுங்களுக்கு 
பிறந்து உமை வளர்த்த சமுகம்
துச்சமுங்களுக்கு இருந்தும் 
படைத்த இறைவனுக்கு 
அச்சமில்லையா உங்களுக்கு??

Saturday, September 29, 2012

முஸ்லிம் காங்கிரஸிக்கு எச்சரிக்கை காத்திருக்கிறது


"பேசினால் பொய் பேசுவான் வாக்களித்தால் மாறுசெய்வான் நம்பினால் துரோகம் செய்வான்”  இது நபி மொழி இது இன்றய கால அரசியல் வாதிகளைப் பார்த்து அன்று நபியவர்கள் கூறியது போல் காட்சிதருகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசியல் வாழ்நாளில் கடந்த 10 - 15 வருட காலப்பகுதியில் பல்வேறு கசப்பான உணர்வுகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கின்ற அப்பாவி மக்களின் நிலை இன்னும் மாறவில்லை மாறுமா என்றும் தெரியவில்லை இதற்கென எம் அரசியல் வாதிகள் என்ன பிரயத்தனம் செய்திருக்கிறார்கள் என்றால் அதிலும் பல கேள்விக் குறிகளைக் கண்டு நிதர்சனமான வாழ்க்கைக்கு வழிதேடிக்கொண்டிருக்கின்ற வாக்காளனாய் நானும் உங்களின் முன்னால்........

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி பல்வேறு பட்ட கருத்துகளும் விமர்சனங்களும் இன்றய இணையத்தளங்களையும் பத்திரிகைகளையும் பக்கம் பக்கமாக எழுதி வார்க்கப்பட்டிருக்கிறது அவற்றுள் மிக முக்கிய கருதுகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் சோரம் போய்விட்டார் மக்களின் வாக்குகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் மக்களின் ஆணை அரசுக்கெதிரானது அதனை அரசிடமே அடகுவைத்துவிட்டார் முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்று வார்த்தைகளின் மாத்திரம் உரைக்கின்றார் என்றெல்லாம் வசைபாடல்கள் எம் சமுகத்தவர்களாலும் மாற்று சமுகத்தவர்களாலும் விதவிதமான கோணங்களில் எழுதி தீர்க்கப்பட்டுவிட்டது இவைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு முஸ்லிம் சமுகத்தின் பொறுப்புதாரிகளான முஸ்லிம் தலைவர்களின் கைகளில் இருக்கிறது என்பது மறைமுகமான உண்மை இவ்வாறான கேள்விகளுக்கும் இந்த அரசியல் மாயைகளுக்கும் விடைகளை எதிர்காலமே பதில் தரவல்லது என்பதும் உண்மை 

இருந்த போதிலும் கடந்த காலங்களும் இவ்வாறான பல கேள்விகளையும் ஏமாற்று வித்தைகளையும் தாங்கிய அரசியலைத்தான் நாம் கண்டிருக்கிறோம் அனுபவித்திருக்கிறோம் ஒன்றுபட்ட ஒரு மரத்தின் கீழ் இருந்த சமுகம் இன்று சின்னா பின்னமாகி பல கிளைகளாக மாறி சீரழிந்திருப்பதை அனைவரும் அறிவோம் முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை வாதிகள் கூட இன்று சிந்திக்கும் அளவு அரசியலின் தன்மை மாறியிருக்கிறது ஏனென்றால் பொறுமைக்கும் எல்லையுண்டு எத்தனை காலம் பொறுத்திருப்பது என்ற கேள்விக்கு விடைதெரியாத படித்த இளைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தனக்கென ஒரு எதிர்காலம் என்று சிந்திக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அவ்வாறு சிந்தித்தவர்கள்தான் மாற்றுக் கட்சிகள் என்று பிரிந்து சென்று இன்றய நிலையில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரைவாசிக்கு மேல் மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து பேரினவாதக் கட்சிகளின் வெற்றிக்கு வழிவகுத்து நிற்பதை யாரும் அவதானிப்பதாக தெரியவில்லை இந்த நிலைக்கு எது காரணம் என்று ஆராய்ந்தால் தடம்புரளுகின்ற எமது நிலைப்பாடும் ஆழுமையற்ற அரசியலுமே என்பதை இன்றய பாமரன் கூட உணர்ந்து கொள்கிறான் 

இது கடந்த காலத்தினை அடிப்படையாக கொண்டது இந்த நிலை தொடரும் பொழுதுதான் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் என்ற கட்சி இருக்குமா என்ற கேள்வி அனைவரின் மனங்களிலும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது முஸ்லிம் காங்கிரஸினை நம்பி உழைத்திருந்த என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் சொல்லொண்ணாத்துயர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு ஈடேற்றம் இல்லை என்பது அவர்களே அறிந்த உண்மை அதை விட்டு விட்டாலும் இன்னும் முஸ்லிம் காங்கிரசை நம்பி வாழுகின்ற இளைஞர்களையும் குடும்பங்களையுமாவது திருப்த்திப்படுத்தும் நிலைக்கு எதிர்காலத்தில் மாறவில்லை என்றால் இத்தருணத்தில் இக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என்பதை எச்சரிக்கையாக கூறிவைக்க விரும்புகிறேன் ஏனென்றால் எல்லாக்காலமும் கொள்கை என்று உரைத்த வாய்கள் இன்று ஏமாற்றப்பட்டிருக்கின்றன மோசடிக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன இவர்களின் பின்னால் எமக்கு எதிர்காலமில்லை என்று சிந்திக்கும் நிலைக்கு கொண்டு விட்டிருக்கிறார்கள் 

ஆகவேதான் இந்த விடயத்தினை இந்தக்காலகட்டத்தில் பதிவு செய்ய நினைத்தேன் இன்று நடந்தேறிய கிழக்கு மாகாண தேர்தல் களம் பற்றி எடுத்து வைக்கப்பட்ட நியாயங்கள் அனியாயங்கள் முடிவுகள் பற்றிய எதிர் வாதங்களுக்கு விடைகளாக எதிர்காலத்தின் அரசியல் நடவெடிக்கைகள் தீர்மானிக்க இருக்கிறது வாக்கு கேட்கின்ற காலத்தில் மாத்திரம் மக்களை நாடி கொள்கையும் கீதமும் பாடிய காலம் மலையேறிவிட்டது இன்றய சிறார்கள் முதல் மூதாட்டிவரை தன்னைப்பற்றி சிந்திக்க துவங்கிவிட்டார்கள் என்ற சிவப்புக் கொடியினை இங்கு அடையாளப்படுத்தியிருக்கிறேன் இந்த கருத்தினூடாக முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று மார்பு தட்டுகின்றவர்ளின் எதிர்கால அரசியலுக்கு ஒரு வாக்காளனாய் நானும் ஒரு கோடு வரைந்திருக்கிறேன் பயணிப்பதும் பாதைமாறுவதும் உங்களின் கைகளில் இருக்கிறது உங்களின் அரசியல் வாழ்வுக்கு ஒவ்வொரு பாமரனும் இட்ட வாக்குகளுக்கு வெகுமானமாய் அவர்களின் வாழ்வுக்கு வழிசெய்யுங்கள் என்றும் வினயமாய் வேண்டிநிற்கிறேன் இறைவன் அனைவருக்கும் அருள் புரிவானாக.  

Saturday, September 15, 2012

அமெரிக்காவுக்கெதிரான எமது போராட்டம்



அன்புக்குரிய சகோதர்களே....!!

அமெரிக்கா என்னும் அரக்கனின் மீண்டுமொரு அவமதிப்பு இஸ்லாத்திற்கு எதிராக அரங்கேறியிருக்கிறது அனைத்து உணர்வாளர்களும் வெகுங்டெழுந்திருக்கிறார்கள். இது இன்று மட்டுமல்ல காலா காலம் தொடர்கிறது. நிகள்கின்ற காலத்தோடு மட்டும் கிளர்ந்தெழுகின்ற எம் சமுகம் காலப்போக்கில் அத்தனையும் மறந்து மீண்டும் கைகோர்த்து நடக்கின்றன. 

இன்றே சிந்தியுங்கள் எதிரியையும் சினேகிதனாக காணும் எம் அரிய மார்க்த்திற்கு தொடர்ந்து பங்கம் விழைவித்த வண்ணமிருக்கும் முனாபிக்கான அமெரிக்காவுககு தக்க பாடம் புகட்டவேண்டிய கட்டாயக் காலத்தில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம் 

அனியாயமாக அரபுலகத்திற்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் எத்தனை உயிர்களை பறித்து அதன் குருதிகளில் குழித்து கும்மாளமடித்த அமெரிக்கர்களுக்கு அரபுலகமே இருப்பிடங்களும் சொகுசு வாழ்க்கையும் கொடுத்து நட்புறவாடிவருகிறது.  இன்று எழுகின்ற அந்த உணர்வுகள் அவர்களின் இந்த மடமைகளுக்கு மருந்தாய் அமையாதது ஏன் அதற்கான முயற்சிகளை ஏன் செய்வதில்லை?  

அமெரிக்கா போன்ற நாடுகளின் உற்பத்திகளில் 60-70 வீதமான உற்பத்திகளுக்கு வியாபாரச்சந்தை மத்திய கிழக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும்தான் இவற்றை கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளும் போர்களும் செய்து தனது ஆதிக்கத்தினை நிலை நாட்டி வருகிறது அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்கேனும் இது பற்றி சிந்திப்போமானால் அமெரிக்காவின் அனைத்து உற்பத்திகளையும் தடைசெய்யலாம் அவைகளுக்கு பகரமான ஏனைய நாடுகளின் உற்பத்திகளைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும் இதை செய்வதை விடுத்து எதிர்ப்பினை மாத்திரம் காட்டிவிட்டு அடங்கிவிடும் உலகமாக முஸ்லிம் உலகம் இருப்பதுதான் கவலையான விடயமாகும் 

கொழுந்துவிட்டெரியும் உணர்வுகளை எதிரிகளின் வெற்றிகளுக்கு எதிராக திருப்பிவிடும் போதுதான் அவர்களை திரும்பிப்பார்த்திடச்செய்ய முடியும் கிளர்ச்சிகளோடு மாத்திரம் நின்றுவிடாது அன்றாடம் எம்வாழ்கையில் பாவிக்கின்ற அவர்களின் உற்பத்திகளை தடைசெய்வதன் முலமாக ஒவ்வொரு தனிநபரும் இந்த போராட்டத்தில் பங்குகொள்ளலாம். இன்றே புறப்படுங்கள் அவர்களை அழித்திட செயல்படுங்கள். அவர்களின் உற்பத்திகளை அவர்களின் முகங்களிலேயே தூக்கி எறிந்துவிடுங்கள்.. எம்மிடமே இலாபங்களடைந்து எம் மதத்திற்கெதிராகவும் சமுகத்திற்கெதிராகவும் செயல்படும் அரக்கன் அமெரிக்காவை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாம் அழித்திடலாம். மனதில் ஒரு உறுதியை எடுத்துக்கொள்ளுங்கள். தயாராகுங்கள் இன்றே தயாராகுங்கள். இறைவன் எம் அனைவரையும் ஒன்றுபடச்செய்வானாக............அவர்களின் நாச வேலைகளுக்கு தக்க பரிகாரம் அளித்திடுவானாக.....

நாளை நமக்காய் உதயமாகட்டும்

பேரினவாதம் பாடியோரும்
வால்பிடித்து வாதங்கள் சேய்தோரும்
உன் எழுச்சிகண்டு வீழ்ந்தனர்
இன்று உன் காலடியில்

வேண்டாம் என்றோருக்கு
வேண்டியதுன் தயவென்று
ஆக்கிவிட்ட இறைவனுக்கே
புகளனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்

ஒற்றுமை எங்கள் பலமென்று
மீண்டும் நிரூபித்த மக்களுக்கே வெற்றியின்று
அற்புதமாய் வெல்லயிருந்ததை
அறியாதோர் சிலரெமது வாக்குகளால்
வெற்றிகண்டு தோற்றோருக்கு
அனுதாபங்கள் ஆறுதலாகட்டும்

Monday, September 3, 2012

காலம் பொன்னானது இன்றே செயல்படுவோம்......

அன்புச் சகோதரர்களே........


அரசியல் அட்டகாசங்கள் அங்குமிங்கும் அலை மோதுகின்றது யாரோ ஒருவரின் இருப்பிற்காய் சகோதரனை சகோதரியை வெட்டி வீழ்த்தும் அனாகரீக அரசியல் அத்துமீறல்களாய் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமிருக்கிறது. தேர்தல் காலம் வந்தால் தோழில் கைபோட்டிருந்த உற்ற தோழனையும் எட்டிநின்று பார்த்து ஏழனம் செய்யும் அரசியல் காலமாக மாறியிருக்கிறதை காண்கிறோம். அரசியல் மேடைகள் அசிங்கமான வார்தைகளாலும் வசைகளாலும் கேட்பதற்கு அருவருப்பினைத் தருகிறது. அத்தனையும் ஒரே சமுகம் ஒரே மதம் ஒரே இறைவனை ஒரே நபியை பின்பற்றுகின்ற உத்தம சமுகத்தினை சின்னாபின்னமாக்குகின்ற ஓர் ஆயுதமாய் இன்று அரசியல் மாறியிருப்பதுதான் கவலைக்கிடமானதாக இருக்கின்றது. என் சகோதரனுக்கு நான் கை ஓங்குகின்றேன் என்று ஏன் சிந்திக்க முடியவில்லை அப்படி என்னதான் எமது கண்களை மறைத்திருக்கிறது.....



மாற்றுச் சமுகத்தின் அரசியலை ஏன் உங்களால் உற்றுப்பார்க்க முடியவில்லை அவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள் அவர்களின் நோக்கம் எங்களுக்கு அபிவிருத்தி வேண்டும் உழைப்பதற்கு வேலை வேண்டும் எங்களுக்கு உயர்பதவிகள் வேண்டும் என்று யாரும் கருதவில்லை அவர்களது சமுகத்தின் நிலையினை ஒன்றுபட்டு உலகுக்கு உணர்த்திடக் காத்திருக்கிறார்கள் நிச்சயமாக பேரின அரசியலோடு ஒட்டியிருக்கின்ற சில ஒட்டுண்ணிகளுக்கும் பாடம் இந்த தேர்தலில் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்பதை ஊர்ந்து ஆராயும் போது காணக்கூடியதாக இருக்கிறது அவர்களுக்கான ஆசனங்களை அவர்கள் இன்றே தீர்மானித்துக்கொண்டார்கள் காட்டிக்கொடுத்தோரும் கூட்டிக்கொடுத்தோரும் இந்த தேர்தலோடு வீடுகளிலும் வெளிநாடுகளிலும் குடியேறுவார்கள்.......


Thursday, August 16, 2012

(வாக்கெனும்) அரிவாளைத் தீட்டிக்கொள்....


தற்பெருமை அரசியலும்
தாளாத துயரங்களுடன் 
அடாவெடித்தன தலைவர்களும்
அவதியுறும் அப்பாவிகளுமாய்
அரங்கேற்றப்படுகின்ற அவலங்களை
கூத்தாடிகளங்கு அகத்தினுள் மகிழ்கின்றனர்

அண்ணன் தம்பியாய்
ஓர்தாய் பிள்ளைகள்போல்
ஒற்றுமை அரசியலை
உலகுக்கறிவித்த சமுகம்
இன்று சின்னாபின்னமாய்
சிதறிச் சீரழிகிறது சிரிக்கிறார்களங்கு

மதத்தால் ஒரு கொடியின் கீழிருந்தும்
மனங்களால் உருவான பாகுபாட்டில்
மானங்களை கூறுபோட்டு
வியாபாரம் செய்கின்றனர்
இலாபத்திற்காய் காத்திருக்கின்றனர்
முதலீடு செய்த முதலாழிகளங்கு

Friday, August 10, 2012

காதலின் வெகுமானம் சந்தேகமா??


உன்னால் உனை உணராத போது 
உலகே உமக்கு இருளாயிருக்கும் 
வெகுநாளாகி வேரூன்றிய வாழ்விலும் 
வெதனைதரும் சந்தேகங்களெதற்கு 

மனதிற்கிட்ட கண்ணாடியால் 
காண்பதெல்லாம் காரிருளாகி 
கண்ணியமான வாழ்வையும் 
காவுகொள்ளச் செய்வததெற்கு 

சந்தேகிக்கத் துணிந்த உமக்கு 
எதையும் சரிகாணத்தெரிவதில்லை 
சரிகாணத்தெரிந்திருந்தால் 
சந்தேகமே குறிக்கிடாது 

Sunday, July 8, 2012

(காதல்)எதிரிக்குத் தூக்குமேடை....!!



உலகக் காதலர்களின்
உரிமையான கூக்குரல்
ஒலித்திருக்கிறது ஓரிடத்தில்
காதலை எதிர்ப்போருக்கு
தூக்குமேடை காத்திருக்கிறதாம் 


காதல் ஒரு பாவமென்றும்
காதலர்கள் பாவியென்றும்
காலாகாலம் எழுப்பிய ஒலிகளுக்கு
சாவுமணி அடிக்கிறார்களாம் 


தன்மனம் ஏற்றவனை/(ளை)
தன்நிலை சரிகண்டு 
காதலித்துக் கரம்பிடிக்க 
எத்தனை காலம் தான் போராடுவது 

Monday, July 2, 2012

அடைந்திடா ஓட்டமெதற்கு....?





ஒடுகிறாய் ஓடுகிறாய் 
எதைத்தேடி ஓடுகிறாய் 
உன் வாழ்நாளில் எதுவரை ஓடுவாய் 
நீ பயந்த உன் எதிர்காலம் 
உன்னை துரத்துகிறதென்று 
உன்னால் முடியுமட்டும் ஓடுகிறாயா??

துர்ப்பாக்கிய சாலியாய் 
துயர்களைக் கண்டும் 
துன்பங்களைக் கண்டும் 
துயில் கொள்ள இடம்தேடி ஓடுகிறாயா??

இல்லை நிம்மதி வேண்டுமென்றும் 
நிலையான சுகம் வேண்டுமென்றும் 
வேறுலகில் கிடைப்பதாய் கண்ட 
கனவின் பின்னால் ஓடுகிறாயா??

Sunday, July 1, 2012

உனக்கென உதிர்ந்த வரிகள்


ஒவ்வொரு வருடமும்
ஓயாது உணர்த்திடும்
உன் மலர்வு நாளை
மகிழ்வோடு கடந்திடப்
போராடுகிறது மனம்


ஏக்கம்தான் வாழ்வாவென
எண்ணத்தோன்றுகிறது
ஏனிந்த ஏமாற்றங்களென
எய்த்து நிற்கிறது மனம்


அத்தனை தந்தைக்கும்
அகம் நிறைத்திடும் செல்வம்
அன்னையாய் மலர்ந்திட்ட
அருமை மகளின் நிகள்வல்லவா


தாய், தாரம் கடந்த பாசம்
தங்க மகளின் திகட்டாத நேசம்
தரணியை வென்ற தற்பெருமை
தளரந்திடா வாழ்விற்கு
(இறைவனை) வேண்டுகிறது மனம்

Thursday, June 28, 2012

நிரந்தரமாய் இடங்கொடு.......!!!



சுதந்திரம் கண்ட நாட்டை 
சுடுகாடாய் மாற்றியதில் 
எஞ்சியது ஆறடி நிலம் 
அதிலுமா கூறுவேண்டுமுனக்கு 


எங்கள் நாடென்று 
எண்ணி உள்ளோரையும் 
ஏய்த்துப் பிழைக்க நினைத்த
ஏழனப்பாவியாய் நீங்கள் 


பிறந்த மண்ணைக் குறிவைத்து 
பிறந்த போதே கழுத்தறுத்து 
நிம்மதியற்ற வாழ்வளித்து 
நிறுவயதுதானென்ன....??

Thursday, June 14, 2012

தரங்கெட்ட காமம் தரணியில்........!!!!



காமத்தின் வாயிலாக 
கலியுகம் கண்ட மானிடமே 
காமம்தனை கருத்துள்ளதாக்கி 
மாசற்ற காமத்தில் மகிழாயோ...??


மதிகெட்ட உன் காமத்தில் 
உறவு மறந்த நேரத்தில் 
மிருகமாய் மாறுகின்ற 
மானிடப்பிறவியா நீ 


அரிய மானிடப்பிறவியாய் 
அவதரித்த நீ 
ஐந்தறிவு ஜீவராசிபோல் 
ஆறாமறிவை மறந்து 
அனுபவிக்கத் துடிக்கிறாய் 

Sunday, June 3, 2012

கற்பை பறித்த காதல் வாழுமா...???


தேன் சொட்டும் வார்த்தைகள் 
நம்பிக்கை தரும் நடத்தைகளென 
மயக்கும் மந்திரங்களுடன் 
மங்கையே உனைக்கவர 
மன்னவனாய்த் தொடர்கிறான் 

நீ சிந்தித்திருந்த கட்டுப்பாடுகளையும் 
பயந்திருந்த எதிர்காலத்தினையும் 
துச்சமாய் உனக்கறிவித்து 
துணிவுடன் வலை வீசுகிறான் 

காதலென்ற காந்தமெடுத்து 
இரும்பாயிருந்த உனைக்கவர்ந்து 
சுற்றமும் மறந்திடச்செய்து 
சில்மிசங்களில் உனையாழ்த்தி 
அவனைத்தொடர வசியம் செய்கிறான் 

பெண்ணே நின்று நிதானித்துக்கொள் 
அற்பம் அவனின் ஆசைதீர்க்க 
பணயமுன் கற்பைக்கேட்கிறான் 
அவனின் கழிவகற்றும் (குப்பைக்)
கிடங்காய் மாற்ற நினைக்கிறான் 

Sunday, May 27, 2012

தேசத்தை நேசிக்க மறுக்கும் ஆட்டமா....???



கிரிக்கட் எனும் விளையாட்டை 
ஆடவருகிறான் அன்னியதேசத்துச் சோனகன்
கொடிபிடிக்கத்தயாராகிறான் என் தேசத்துச் சகோதரன்
அன்புச் சகோதரனே உன்தேசத்தை வெல்ல வருகிறான்
மாற்றானின் வெற்றிக்காய் எப்படி உன்னால்
குரலெழுப்ப குதூகலிக்க முடிகிறது


எம்மார்க்கம் கற்றுத்தந்த தேசத்துக்கான தியாகத்தை
துச்சமென தூக்கியெறிந்து என்மதத்தவனென்று
எம்தேச ஒற்றுமைக்குப் பங்கம் விழைவித்து
உடன்பிறப்பிற்கே எதிரியாய் நீயானதை
எப்படி உன்னால் மறுக்க முடியும்


தூரதேசத்தவனுக்கு கூஜா தூக்கிவிட்டு
என்தேசமென்று மார்புதட்டுபவனிடம்
எதிர்வாதம் புரிதலில் நியாயம்தான் கிடைக்குமா
நீ நேசிக்க மறந்த உன்தேசத்தை
பூஜிப்பவன் சொந்தம் கொண்டாடினால்
உன்வாதம்தான் ஜெயித்திடுமா??


உன்தாய்க்கு நிகரான தாய்நாட்டைநேசித்து
மதத்தின் வாயிலாக மாற்றானின் மனங்களை வென்று
உன்தேசத்தில் பிறந்தபயனுக்காய்
நாசம் கண்டிடாத ஒற்றுமையினை
நிலைநிறுத்துவதில் தர்மமாகிடாதா...???

Thursday, May 24, 2012

றிஸ்வானா அபுபக்கர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்


எனது ஊரின் மீது பற்றும் நான் என் ஊரவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் வீண் பேகவில்லை கடந்த சில வாரமாக ஒரு தர்ம சங்கடமான நிலையொன்று பேஸ்புக்கில் உலவியதை யாவரும் அறிவீர்கள் அதாவது றிஸ்வானா அபுபக்கர் என்ற பெயர் தாங்கிய பேஸ்புக் பக்கம் ஒன்றில் பாலமுனை என்ற எனது ஊரின் பெயர் விலாசமாக இடப்பட்டிருந்தது அதிகமான எனது ஊரைச் சேர்ந்த நண்பர்கள் தங்களது நண்பர் பட்டியலில் இப்பெயரை சேர்த்திருந்தார்கள்


திடீரென கடந்த வாரம் முதல் அந்த பக்கத்தில் மிகவும் அசிங்கமான (ஒட்டுத்துணி கூட இல்லாத நிர்வாணமான ) புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தது விபரிப்பதற்கே நாகூசும் அளவு மிகவும் வெறுக்கத்தக்க புகைப்படங்களாக இருந்தது இந்த புகைப்படங்கள் எங்களை நண்பர்களாக ஏற்றவர்களெல்லாம் பார்வையிட்டுவிட்டு இது தொடர்பாக கேள்விகளை எங்களிடம் கேட்கலானார்கள் இந்த பிரசுரத்தின் பின்னர் மிகவும் அவமானங்களையும் அவப்பெயர்களையும் எங்கள் ஊர் சம்பந்தமாக சந்திக்க நேர்ந்தது இதன் தொடரில் இதனை ஆராய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டோம் அதன் வாயிலாக திடுக்கிடும் சில உண்மைகள் தெரியவந்தது அதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையிருப்பதால் இந்தப் பகுதியினை எழுதுகிறேன்


றிஸ்வானா எனும் பெயர்தாங்கிய அந்தப் பெண் பாலமுனையைச் சேர்ந்தவர்தான் என்பதை முதலில் கண்டு பிடித்துக்கொண்டோம் ஆனால் அங்கு பிரசுரமாகியிருந்த புகைப்படங்கள் எதுவும் அந்த பெண்ணுடையது அல்ல எதற்காக இந்த பக்கமும் பிரசுரமும் என்று துருவி அராய்ந்த போதுதான் உண்மை புலப்பட்டது அதாவது றிஸ்வானா என்ற இந்த ஏழைப்பெண்மணி சவுதிக்கு சென்று அங்கு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்திருக்கிறார் அவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்த சம்மாந்துறையினை பிறப்பிடமாக கொண்ட கேடுகெட்டவன் அந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் முடிப்பதாக வாக்குறிதியும் அளித்து பணம் நகைகளை அந்த பெண்ணிடமிருந்து பெற்று அனுபவித்திருக்கிறான் இந்த பெண் திடீரென நாடு செல்ல நேர்ந்ததால் இவன் அதைத் தெரிந்து கொண்டு தனக்கு இரண்டாயிரம் றியால் தந்து விட்டு செல்லும் படி கேட்டிருக்கிறான் பணமில்லாத அந்தப்பெண் இவனிடம் அறிவிக்காமலே நாட்டுக்கு திரும்பியிருக்கிறாள் இதைக் காரணமாக வைத்து அந்த பெண்ணின் பெயரில் பக்கத்தினை உருவாக்கி அவளது தொடர்பிலக்கத்தினை இட்டு அவள் உரையாடுவது போலவே உரையாடி இந்த அசிங்கமான பிரசுரத்தினை ஏற்படுத்தியிருக்கிறான் 


இந்த விடயத்தில் எங்களது ஊரை சரியென்று காட்டுவதற்காக மற்றய ஊரை பிழையாக சொல்ல முன்வரவில்லை அந்த ஊரைப் பிறப்பிடமாக கொண்டதாக அவன் சொல்லியிருக்கிறான் அவனது பெயர் ஆசிர் தற்போது ஜித்தா நகரில் வேலை செய்கிறான் இவனுக்கு தக்க பாடம் கற்றுத்தர வேண்டும் அவன் வைத்திருந்த தொலைபேசி இலக்கங்களாக 00966599525942/00966591069867/00966582408686 என பல இலக்கங்கள் கிடைக்கப்பெற்றன இவனை அடையாளங்காண இந்த இலக்கங்கள் உதவியாக இருக்கும் சவுதியில் இருக்கின்ற நண்பர்கள் இவனை அடையாளங்கண்டு பொலிசுக்கு தெரியப்படுத்துங்கள் தேவையான ஆதரங்களை மெயில் மூலம் அனுப்தித்தருகிறோம் இவனது புகைப்படமும் இருக்கிறது விரைவில் பிரசுரிக்கிறோம் இலங்கைக்கு வராதவகையில் பொலிசில் புகார் பதிவு செய்யப்பட இருக்கிறது இவன் கத்தாரில் இல்லாததால் இவன் தப்பித்தான் இங்குள்ள சகோதரர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். இவனை விட்டுவிடாதீர்கள் 

Sunday, May 20, 2012

யுத்த வெற்றி என்ற மாயை......!!!!



சத்தமின்றிக் கடந்த 
யுத்த நிறைவின் மூன்றாண்டில் 
இன்னும் மருந்தின்றிய 
தழும்புகளோடு அழுகிறது நாடு 


வென்றோம் எங்கள் நாடென்று 
குதூகலிக்கும் சாராரும் 
இறந்தவர்களுகாய் இரங்கல் செய்வோரும் 
இருப்பவர்களின் பிணிதீர்க்க 
இம்மியளவும் நினைத்திடவில்லை 


மூன்றாண்டு கடந்தும் 
முடிவுக்கு வராத சிறைபிடிப்புகளும் 
நிறுத்திடாத இனத்துவேசங்களும் 
நிர்க்கதியற்ற வாழ்வுகளும் 
உண்மையான வெற்றியாகிடுமா??


அழிந்தவர்களின் நாமங்களோடு 
அழித்தவர்களைப் பழிதீர்க்க
இருப்பவர்களின் வதை போக்காது 
வாய்ப்பேச்சுகளில் யுத்தம் செய்து 
ஊனங்களுக்கு உபத்திரம் சேர்ப்பதில் 
காணத்துடிப்பதுதான் எதுவோ....!!!

Saturday, May 19, 2012

வேரை மறுத்த விழுதுகள்



விருட்சமாய் வேரூன்றி 
விழுதினைப் பிரசவித்து 
தாங்கும் விழுதுகளைத் 
தேடும் வேர்களாய்த் தாய் 


வேர்களின் சக்தியில் 
உருவம் பெற்றதை மறந்து 
வானத்திலிருந்து வீழ்ந்ததுபோல் 
நிலத்தையாளத்துடிக்கும் 
விழுதுகளாய் பிள்ளைகள் 


பட்சிகளும் ஊர்வனங்களுமாய் 
பாதியில் கண்ட உறவுகளில் 
தனையென்றும் தாங்கும் 
வேர்களை நோக்கிடாத 
நன்றி மறந்த விழுதுகளங்கு 

Friday, May 18, 2012

விபத்தில் மரணம் வீர மரணம்

இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜியுன் 

விபத்தில் மரணம் விழிகள் குளமானது 
விம்முகிறது மனம் ஜீரணிக்க முடியவில்லை 
இன்னாரது நட்பெனக்கு மூன்றரைவருடம் 
ஓரறையில் உண்டு மகிழ்ந்திருந்து 
அளவளாவிய தருணங்கள் கண்முன்னே 
நிழல்களாய் எனைத்தொடர்கிறது 


கால ஓட்டம் இத்தனை வேகமாவென
மரணச்செய்தியில் உணர்ந்து நொந்தேன்
வெகுதொலைவு தொடர்பின்றிருந்தும்
பழகிய நட்பினை பரிதாபச்செய்திவந்து
பதைக்கச் செய்கிறது நெஞ்சை


மனிதர்களுக்குப் பல பக்கங்கள்
அத்தனை மனிதர்களின் நிலைகளில்
மரணம் மாத்திரம் நன்றியுடைய பகுதியினை
நினைத்திடச்செய்து உரைத்திடமுடிகிறது


துணைவனைக் காத்திருந்த மனைவிக்கும்
தந்தையினைக் காத்திருந்த பிள்ளைகளுக்கும்
பிரிவின் துயர்நீத்திட எதிர்பார்த்திருந்த
உறவுகளுக்கும் புகைப்படவாயிலாக
மரணத்தின் தரிசனம் அனைத்திலும் கொடுமையானது

Thursday, May 17, 2012

காதலின் வெற்றி



கண்ணெதிரில் கடந்தாயொரு மின்னலாய் 
கண்பார்வை வீ்ச்சில் சிக்கிவிட்டேன் மீனாய் 
கவர்ந்ததன் மாயமென்னவென்றேன் 
காவியிலும் தடுமாறச் செய்யும் 
கன்னியுன் காதலென்று உணர்த்திவிட்டாய் 


திடமான உறுதிகொண்டும் 
திருவாசகம் ஓதிக்கொண்டும் 
திரும்பியேனும் பார்காது - எனைக்
காத்துநின்று வீற்றிருப்பேனென்றவெரை 
காலில் விழச்செய்யும் சக்தியாம் காதல் 


மனிதனாய் மலர்ந்ததுமே 
காதலனாய் ஆனாயென்ற கருவில் 
மானிடனின் வாழ்வோடு பிணைந்து கொண்ட 
அற்புத உணர்வும் காதலென்று 
வீழ்ந்தவரெல்லாம் விலகிநிற்கின்றனர் 


காதலும் காமமும் காரணமாகி 
அன்பும் பாசமும் விழைவுகளாக 
காலத்தையும் வாழ்வையும் கடத்தும் 
மனித ஜனனத்தின் நிகழ்வில் 
நிலைத்திருக்கிறது உலகம் 

Sunday, May 13, 2012

மாதருக்கு மகுடம் தாய்மை



உலகத்து ஜனனத்தின் சொந்தக்காரி - என் 
உருவத்தின் அழகுக்கு உரிமைக்காரி
உருவான உயிர்களில் உத்தமி
தாயென்ற நாமத்தின் அதிபதி 


மாதருக்கு மகுடம் தாய்மை ஏற்று 
மடிதவழ்ந்து மார்பேந்தி மகிழ்வுதந்து 
சேயென்று சோர்வெதுவும் கருதாது - தன்
சுகமின்றி சுகவாழ்வளிக்கின்ற சுடரொளி 


சேய்நலம் தான் கருதி 
சுயநலம் மறந்திருந்ததில் 
சுற்றமும் போற்றும் 
சுவனத்து வாசலும் உம் வழி 


பேதங்களேதுமற்று பேறுகளும் நோக்காது 
பிள்ளை நிலையில் பிழைகளிருந்தாலும் 
மன்னிக்கும் மாந்தருள் முதன்மையானவளாய்  
மகிழ்வுறும் மனிதத் திலகமிவள்


அம்மா புகளை அகிலத்திலைடைந்து 
அன்னை அவளின் பாசத்தில் திழைத்து 
உயரிய வாழ்வை ஈருலகிலும் அடைய 
உணரும் பிள்ளைகள் உம்மால் உருவாக வேண்டும் 

Tuesday, May 8, 2012

விலைவாசியா..கொலைவாசியா ??


முன்னேற்றமற்ற பணப்பெறுமதியில் 
வீழ்வது மக்களாகிறது 
வருமானத்திற்கு வழியற்று 
விலை ஏற்றத்தில் முழ்கின்றனர் 


உலகப்பொருளாதாரத்துடன் 
கையேந்தும் நிலையில் 
யாசகத்திற்கும் வழியற்ற 
பொருளாதாரப்பின்னடைவு 


பெறுமதியற்ற ரூபாவினால் 
அத்தனை பெருட்களும் அயலவரிடம்
கொள்வனவில் குறைவின்றி 
விற்பனைக்கு ஏதுமற்று 
திண்டாடுகிறது நாடு 

Sunday, May 6, 2012

இஸ்லாத்தில் பொதுவாக தடுக்கப்பட்டவை

இஸ்லாத்தினைப் பொறுத்தவரை அதன் கோட்பாடுகளுக்கு அப்பால் செயல்பாடாமல் பாதுகாத்துக் கொண்டோமானால் உண்மை முஃமீனாக விளங்க முடியும் எம்மால் முடிந்தவரை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகளில் இருந்து நாமும் தவிர்ந்து நடந்தாலே போதுமானது அனைவருக்கும் பயனுடையதாக அமையும் என்ற வகையில் மீண்டும் இதனை பிரசுரிக்கிறேன் 

இஸ்லாத்தில் பொதுவாக தடுக்கப்பட்டவை
  • அநியாயமாக ஓர் உயிரைக் கொல்வது
  • சிசுக்களைக் கொல்வது.
  • தற்கொலை செய்வது.
  • விபசாரம் செய்வது.
  • ஓரின சேர்க்கை புரிவது.
  • சுய இன்பம் அடைவது.
  • மது அருந்துவது, அதை தயார் செய்வது, அதை விற்பது, எடுத்துச் செல்வது.
  • திருடுவது.
  • பெற்றோருக்கு மாறு செய்வது, அவர்களை அதட்டுவது, மிரட்டுவது, சீ என்று அவர்களை சொல்வது.
  • போரில் புறமுதுகுக் காட்டி ஓடுவது.
  • முஃமின்களுக்கு நோவினை செய்வது, அவர்கள் செய்யாத குற்றத்தை அவர்கள் மீது சுமத்துவது, அவர்களைக் குறை கூறுவது.
  • அல்லாஹ்வுக்கு அதிருப்தியளித்து மக்களை மகிழ்விப்பது.
  • ஒப்பந்தங்களை உறுதி செய்தபின் அவைகளை முறிப்பது.
  • பெற்றோரை மாற்றிக் கூறுவது.
  • நெருப்பால் தண்டிப்பது, உயிர் உள்ள வைகளை, இறந்தவைகளை நெருப்பிட்டுக் கொளுத்துவது.
  • இறந்தவர்களின் உடல் உறுப்புகளை வெட்டுவது, சிதைப்பது.
  • பாவமான, தவறான, அநியாயமான காரியங்களில் பிறருக்கு உதவுவது.
  • முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது.
  • முஸ்லிம்களுக்கு கெடுதல் விளைவிப்பது, அதற்கு சூழ்ச்சி செய்வது.
  • மார்க்கக் கல்வி ஞானமின்றி தீர்ப்பளிப்பது.
  • அல்லாஹ்வுக்கு பிடிக்காதவற்றில் பிறருக்கு கீழ்படிவது. (அவர் யாராக இருப்பினும் சரியே!)
  • பொய் சத்தியம் செய்வது.
  • வீணாக சத்தியம் செய்வது.
  • ஒழுக்கமான பெண்களை பழி சுமத்தியவர்கள் தவ்பா செய்து திருந்தவில்லையெனில் அவர்களது சாட்சியை ஏற்றுக் கொள்வது.
  • அல்லாஹ் அனுமதித்தவைகளை ஹராம் என்று விலக்கிக் கொள்வது.
  • ஷைத்தானின் வழிகளை பின்பற்றுவது.
  • அனுமதியின்றி பிறர் பேசிக் கொண்டிருப்பதை கேட்பது.
  • அனுமதியின்றி பிறர் வீட்டில் நுழைவது.
  • தனக்கு சொந்தமல்லாததை தனக்கு சொந்தமானது என்று கூறுவது
  • தான் அனுபவிக்காததை அனுபவித்த தாகக் கூறுவது, தன்னிடம் இல்லாததை இருப்பதாகக் கூறுவது.
  • செய்யாத ஒன்றைக் கூறி புகழ் தேடுவது.
  • இறை கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானவர்களின் ஊர்களுக்குள் செல்வது. (ஆனால் படிப்பினை பெரும் நோக்கத்துடன் அல்லது அழுதவர்களாக அவ்வூர்களுக்குச் செல்வது கூடும்.)
  • பாவமான விஷயத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது.
  • பிறர் குறைகளை ஆராய்வது.
  • நல்ல ஆண், பெண்கள் மீது கெட்ட எண்ணம் கொள்வது.
  • பொறாமை கொள்வது.
  • குரோதம் கொள்வது.
  • உறவுகளை, சமுதாயத்தை புறக்கணித்து வாழ்வது.
  • அசத்திய வழியில் செல்வது.
  • பெருமை, பகட்டு, தற்பெருமை, அகந்தை, அகம்பாவம், மமதை கொள்வது.
  • உலக வஸ்துக்களைக் கொண்டு மகிழ்ச்சி அடைவது.
  • பூமியில் பெருமையாக நடந்து செல்வது.
  • மக்களை விட்டும் முகத்தை திருப்பிக் கொள்வது. (அதாவது மக்களிடம் பழகுவதை தவிர்ப்பது பெருமையின் அடையாளமாகும்.)
  • கொடுத்த தர்மத்தை திரும்பப் பெருவது. (தர்மம் கொடுத்த பொருளை விலைக்குக் கூட திரும்ப வாங்கக் கூடாது.)
  • தந்தை தனது மகனைக் கொலை செய்துவிட்டால் அவரைக் கொல்வது.
  • பிறரின் மர்மஸ்தானத்தைப் பார்ப்பது. (இந்த சட்டத்தில் ஆண், பெண் இருபாலாரும் சமமானவர்களே.)
  • பிறரின் தொடையை பார்ப்பது. (அவர் இறந்தவராயினும் சரியே!)
  • சங்கைமிகு (ரஜப், துல் கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) மாதங்களின் கண்ணியத்தை பாழ்படுத்துவது.
  • கெட்ட வழியில் சம்பாதித்து நல்ல வழியில் செலவு செய்வது.
  • தொழிலாளியிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பது.
  • பிள்ளைகளுக்கு சமத்துவமின்றி அன்பளிப்பு வழங்குவது.
  • வஸிய்யத் செய்வதில் தவறிழைப்பது.
  • வாரிசுக்கு வஸீய்யத் செய்வது.

Saturday, May 5, 2012

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!!


விழித்தெழு என் வாலிபனே 
உன் தூக்கம் கலைத்து விழித்தெழு 
உன் தலைவனின் பாதையில் 
படுகுழி காத்திருக்கிறது விழித்தெழு 


உன்னை மயங்கச்செய்த கட்சிவாதமும் 
உனக்கு ஆசையூட்டிய பசப்பு வார்த்தைகளும் 
கானல் நீராயானது இன்னுமா தூக்கம் 
விழித்தெழு உன்னை நீயறிவாய் 


சமுகத்தின் ஒற்றுமைக்காய் வாக்கிட்டு 
உன் சந்தோசத்திற்காய் காத்திருந்து 
தசாப்தங்கள் கடந்தும் பரிதாப வாழ்வுடய
உன் தவிப்பிலிருந்து விழித்தெழு 


சமுக ஒற்றுமை நோக்காகக் கொண்டு 
அடக்கு முறைக்கு சாவுமணியடித்த 
தங்கத்தலைவனின் உரைகள் மறந்து 
தாரைவார்த்த தலைவர்களின் வழியறுத்து 
வீரியம் கொண்ட விழுதுகளாய் விழித்தெழு 


அன்னியன் உனை அவமதிக்கிறான் 
ஆட்சியாளன் உனை ஏறிமிதிக்கிறான் 
நிராயுத பாணி உனை நிற்கவைத்துச் சுடுகிறான் 
உணர்வற்ற உறக்கமெதற்கு விழித்தெழு 

கல்முனைக் கொடியேற்றம்



எமது பிரதேசத்தில் அப்பட்டமான இணைவைத்தலோடு அனாச்சாரத்திற்கு வழியமைத்துத்தரும் ஒர் இடமாக இருந்துவருகின்ற கல்முனைக் குடி கொடியேற்றப்பள்ளி வாசலைப் பற்றி பரவலாக அனைவராலும் பேசப்பட்டுவருகிறது. இதில் வேடிக்கை என்ன வென்றால் இவற்றை ஆரம்பிப்பதற்கும் இதை ஊக்குவிப்பதற்கும் ஊரின் மேயரும் உலமாக்களும் ஒத்து நிற்பதுதான் மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கிறது


இஸ்லாத்திற்கு மாற்றமான இந்த விடயம் மாற்று மதத்திலிருந்து பரவிய கொடிய நோய்.  பண்டய காலத்தில் பல பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது காலப்போக்கில் திறம்பட இஸ்லாத்தை விளங்கிய ஆலிம்களால் அவை முழுவதுமாக தடுக்கப்பட்டு ஓரளவு ஏனய ஊர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறது ஆனால் கல்முனை என்ற மிகப்பெரிய ஊரும் அதன் நிருவாகமும் இதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை


அங்கு என்னதான் நடக்கிறது என்று ஆய்ந்து பார்த்தால் அப்பட்டமான அனாச்சாரம் என்றோ மரணித்த ஒரு சாதாரணமான மனிதனின் கபுரைச் சுத்தி மக்கள் வலம் வருவதும் பிள்ளை கேட்டு அங்கு வைக்கப்பட்டிருக்கின்ற எண்ணையினை வயிற்றில் தடவுவதும் குழந்தைகளின் தலைகளில் தடவுவதும் அவர்களுக்கு காணிக்கை என்ற பெயரில் ஆடு மாறு போன்றவற்றை கொடுப்பதும் இன்னும் பல எழுத முடியாத வணக்கங்கள் என்ற பெயரில் இடம்பெறுகிறது

Wednesday, May 2, 2012

தவறுக்குத் தவறு நாம் செய்வதா...???



அன்பார்ந்த தோழர்களே......



காலத்திற்குப் பொருத்தமான ஒரு விடயத்தினை தங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். மேலே நான் இட்டிருக்கின்ற புகைப்படங்கள் பரவலாக சமுக தளங்களில் உலவக்காண்கிறோம் இது முற்றிலும் எமது மார்கத்திற்கும் சமுகத்திற்கும் மாறுபட்ட விடயமாகும் இவர்களை பழிவாங்குகின்றோம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் மீண்டும் தவறிழைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களின் தவறுகளை இவ்வாறு நாம் இழிவு படுத்தி பழிதீர்க்கலாகாது காரணம் எமது மார்கத்தினைச் சேர்ந்தவர்கள் இவர்கள், இவர்களை எமக்குப் பிடிக்காவிட்டாலும் இவர்களை நேசிப்பவர்களும், இவர்கள் பிரதிநிதித்துப்படுத்தும் எம் சமுகத்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்காகவாவது இவ்வாறான விடயத்தினை தவிர்ந்து கொள்ளுதல் சிறப்பாக அமையும் குறிப்பாக பேஸ்புக் நண்பர்கள் இவற்றை மீண்டும் மற்றவர்ளுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள் 


நடந்தேறிய(தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு) முஸ்லீம் சமுகத்திற்கு எதிரான நடவெடிக்கைகளுக்கு தீர்வுகள் எட்டப்படாத இந்த காலகட்டத்தில் இருக்கின்ற அத்தனை முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஆதரிப்போரை ஒரே கொடியின் கீழ் திரட்டியேனும் எமக்கான தீர்வுகளை எட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கான உங்கள் உழைப்புகளைச் செய்யுங்கள்.

தாய் தேடும் விடை

பட்ட மரங்களின் நடுவே
பட்டமரமாய் இத்தாய்
வரண்ட நிலத்துடன்
நா- வரண்ட இத்தாயோ
வேதனை தீர்ப்பாயா ? என்று
வேண்டுகிறாள் இறைவனிடம்


விதியின் விளையாட்டோ
வீணர்களின் விழைவோ 
பேறுகளற்ற பேதையாய்
விடும் கண்ணீருக்கு
விடை தேடுகிறாள்


இது போன்ற
தாயென்ற இத் தங்கங்களை
புழுதியில் புதைத்துவிட்டு
புத்திரர்களாய் வலம் வந்து 
தாய் புகள் மறந்த சேய்களாகிறோம் 


தாய் விடும் கண்ணீரில் மூழ்கி 
தரணியில் வாழ்விழந்து 
தனிமரமாய் நீயும் மாறுமுன்  
தாய்பாசத்தில் நனைந்திடுங்கள் 

Tuesday, May 1, 2012

உத்தமத் தொழிலாளி...


உதிரத்தை வியர்வையாக்கி
உலகத்தின் பசிதீர்க்க
தனக்கென உண்ணமறந்த
உத்தம அவதாரம் தொழிலாளி


ஊரார் உறவினர் உளமாற
உவகை மட்டும் தனதாக்கி
உறக்கம் தொலைத்த
உயிரில் உயர்ந்தவன் தொழிலாளி


இவன் கை சோர்ந்து விட்டால்
உலகமும் இயங்க மறுத்துவிடும்
இதுநாள்வரை ஓயாது உழைக்கும்
இயந்திரத்தில் திலகம் தொழிலாளி


இவனையும் வதைத்து மிதிக்கிறான்
ஈரமற்ற மனங்கொண்ட முதலாளி
இவனுக்கானதேதுமில்லை
இன்றொருநாள் இவன் தினமாம்
இனிய வாழ்த்தும் கூறிடுங்கள்

Sunday, April 29, 2012

சுயநலச் சுமை உன்மீது



உன் பேராசைகள் கண்ணை மறைத்திருப்பதால் 
உம் பாதையின் படுகுழிகள் உமக்குத் தெரியவில்லை 
சுற்றமும் சூழ்ந்த சுகந்தம் மறந்து 
பாதாளம் நோக்கிய பயணத்தினைத் 
தேர்ந்தெடுத்துக்கொண்டாய் மானிடனே!! 


சமுதாயமென்று சமாதியாக்கப்பட்டது 
சமூகமொன்று சீரழிக்கப்படுகிறது 
சல்லாப வாழ்வைத்தேடிய உன் வழியில் 
சறுக்கல்களும் உள்ளதென்று மறந்ததேனோ!! 


இன்றய பொழுதின் இன்பத்திற்காய் 
எதிர்காலத்தினை அடகுவைத்து 
ஆசைகளின் ஈர்ப்பில் கவர்ந்து 
அடியோடு உனை அழித்திடத்துணிகின்றாய் 

Wednesday, April 25, 2012

தீர்வுகள் பரிகாரங்களாகட்டும்..........


புத்த மதம் போதித்திராத 
புனித பூமிகள் தேடி
பௌத்தர்களின் அட்டூழியங்களால் 
அடிமைப்படுத்தப்படும் ஆட்சியாளர்கள் 


சுதந்திர நாடென்றும் 
சுதந்திரங்கள் உண்டென்றும் 
வாய்ப்பேச்சில் மாத்திரமுரைத்து 
சுயநலங்களுக்காய் மீறல்களும் அவர்களால் 


அன்று மீறிய சுதந்திரத்திற்காய் 
ஆயுதமேந்தினார்கள் அவர்கள் 
இன்று மீறப்படும் சுதந்திரங்கள் சேர்ந்து 
பேரழிவுக்கு வித்திடுகின்றன 


காபீர்களான காடையர்களே - நீங்கள்  
புனித பள்ளியில் புகுந்து நாசம் செய்து 
இஸ்லாத்தையே அவமதித்ததில் 
உம்நாசம் உம்கையாலானதை மறந்தீர்கள் 

Thursday, April 19, 2012

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 12)

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 11) 

காத்திராத காலம் கரைந்தோடியது

கணவனின் பிணியும் பழகிப்போனது
வறுமையின் பிடியும் இறுகலானது
எதிர்காலக் கேள்விகள் சுமைகளானது
நகராமல் நகரத்துடித்த நாட்களை
நகர்த்தினேனதை மறக்கவில்லை

கிடைத்த வேலைகளோடு பசியாறி
மிகுதியான நேரங்களில் தாதியாகி
கடந்த நாட்ளில் ஓர் நாளில் பேரதிர்வு
நாற்காலியில் இருந்த கணவன்
இருந்தவாறே இறந்திருந்தார்
அந்தக் கறுப்புநாளை மறக்கவில்லை

அயலவர் கூடிவர இறுதிவலம்
அமைதியாக நடந்தேறியது
எனக்கென இருந்த பந்தம் இறுதியானது
அவர் இருப்பதைவிட இறந்தது மேலென
என் கதுகளுக்கே கேட்குமளவு
உரைத்தார்களதை மறக்கவில்லை

Wednesday, April 18, 2012

ஓர் தீக்குச்சி வேண்டும்.....



ஓர் தீக் குச்சியைத் தந்துவிட்டுப்போ
என்மனதில் கொழுந்துவிட்டெரியும்
தீ கொண்டத்தனையும் எரித்துவிட


பசியால் ஒரு பட்டாளம் பரிதவிக்கிறது
குசியால் ஒரு சாரார் கும்மாளமடிக்கிறார்கள்
பகிர்ந்தளித்திட ஒரு தீ மூட்ட வேண்டியிருக்கிறது


வயதால் விதவையாகி வஞ்சிக்கப்டுகிறாள் - மாது
வரதட்சனை வேண்டுமென்று புரட்டியெடுக்கிறான் - காளை
காலமது சொற்பமென வாழ்வைக் கற்றுத்தர
தீயிட்டல்லவா உருக்க வேண்டியிருக்கிறது


குழந்தையொரு செல்வம் செழிப்பும் அதிலுண்டு
மறந்த முதலாளர்கள் குழந்தைகளில்
சம்பாத்தியம் செய்கிறார்களே - அவர்களது
உடமைகளையும் சாம்பலாக்க வேண்டியிருக்கிறது


வேண்டாம் வேண்டாமென்று கூக்குரலிட்டும் 
பாவம் மனிதர்களை வதைசெய்து 
ஆட்சி பீடத்தில் சல்லாபம் காணும் - அரசன் 
அவனின் ஆட்சியை கொழுத்த வேண்டுடியிருக்கிறது 





Related Posts Plugin for WordPress, Blogger...